நடிகை நித்யாமேனன் வீட்டில் நடந்த சோகம்..!

விஜய் நடித்த மெர்சல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நன்கு பிரபலம் அடைந்தவர் நித்யா மேனன்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர் தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் நித்யா மேனன் தனது தாய் வழி பாட்டி மறைந்ததை தொடர்ந்து அவர் சோகத்தில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து நித்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாத்தா மற்றும் பாட்டியின் புகைப்படங்களை அப்லோட் செய்து, ‘ஒரு சகாப்தம் முடிந்து விட்டது. அம்மம்மா (பாட்டி), மற்றும் என் தாத்தாவை பிரிந்து விட்டேன். அவர்களை வேறொரு உலகில் பார்ப்பேன்’ என்று கூறியுள்ளார்.
நித்யா மேனனின் இந்த பதிவுக்கு கமென்ட் செய்து வரும் அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். தாத்தா பாட்டிக்கும், தனக்கும் இடையிலான உறவு குறித்து நடிகை நித்யா மேனன் பல பேட்டிகளில் உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.