என் பாய் ஃபிரெண்ட் என்னை ஏமாத்திட்டான் - ரகசியத்தை உடைத்த நடிகை நிவேதா பெத்துராஜ்

மதுரையில் பிறந்து வளர்ந்த நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் அதிகம் நடத்தி வருகிறார். சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சமீபத்தில் ஓடிடி வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். திறமையான நடிகையாக இருந்தாலும் தனக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை என அவர் கூறியுள்ளார். அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை டச்சில் வைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் உடன் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் மட்டும் நடித்த நடிகை நிவேதா பெத்துராஜை சுற்றி ஏகப்பட்ட வதந்திகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. உதயநிதி ஸ்டாலின் துபாயில் நிவேதா பெத்துராஜுக்கு 50 கோடி ரூபாயில் பங்களா வாங்கி தந்ததாக வதந்திகள் கிளம்பிய நிலையில், அந்த வதந்திக்கு சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் பதிலடி கொடுத்திருந்தார்.
நெகட்டிவாக தான் எதையாவது நினைத்தால் அப்படியே நடந்து விடும் என்று சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் நிவேதா பெத்துராஜ். என்னோட பாய்ஃபிரெண்ட் என்னை ஏமாற்றிவிடுவான், பாய்ஃபிரெண்ட் சீட் பண்ணப் போறான் நினைச்சேன் உடனடியாக பாய் ஃபிரெண்ட் ஏமாத்திட்டான் என பேசியுள்ளார்.
மேலும், தான் இப்போ வைத்திருக்கும் கார் எப்படி இருக்கணும் என்ன கலர்ல இருக்கணும் என்பதெல்லாம் எப்போதோ நினைத்தது என்றும், ஃப்யூச்சர்ல தன்னோட கார் எப்படி இருக்கணும் என்பதை கூட நினைத்து வைத்திருக்கிறேன் என பேசியுள்ளார்.
நிவேதா பெத்துராஜின் பாய் ஃபிரெண்ட் யாராக இருக்கும் என தற்போது அவரது பேட்டியை சோஷியல் மீடியாவில் பலரும் ஷேர் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், பாலிவுட் நடிகைகள் செய்து கொள்வது போல பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் எல்லாம் தனக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை என்றும் தன்னுடைய அழகு எப்படி இருக்கிறதோ அதை சீராகவும் சிறப்பாகவும் மெயின்டெயின் பண்ணாலே போதும் என நினைப்பவள் என அந்த பேட்டியில் நடிகை நிவேதா பெத்துராஜ் பேசியுள்ளார்.