நீச்சல் உடையில், நைட்டி அணிந்து கொண்டு என்ன செய்கிறார் பத்மப்ரியா..?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்மப்ரியா மீண்டும் மலையாளத்தில் ’ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
 
padmapriya

குறுகிய காலத்தில் பல சிறந்த கதாபாத்திரங்களை ரசிகர்களுக்கு வழங்கியவர் பத்மப்ரியா. நடிகர் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்மப்ரியா மீண்டும் மலையாளத்தில்  ’ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’ படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பத்மப்ரியாவின் பதிவுகள் அடிக்கடி கவனம் பெறுகின்றன. அந்த வகையில், புதியதாக அவர் பதிவிட்டுள்ள வீடியோ பெரியளவில் கவனம் பெற்று வருகிறது. 

கடந்தாண்டு நெட்ஃப்ளிக்ஸ் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற படம் ‘மின்னல் முரளி’. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சூப்பர்ஹீரோ படம். இதில் மின்னல் முரளி என்கிற சூப்பர்ஹீரோவாக டோவினோ தாமஸ் நடித்திருந்தார்.  அந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடலை பயன்படுத்தி பத்மப்ரியா இந்த வீடியோவை உருவாக்கியுள்ளார்.

நடிகை மின்னல் முரளி போல் மின்னல் மினியாக அவர் தோன்றியுள்ளார். அவர் காரின் மேல் ஏறி மரத்தில் ஏறுவதை வீடியோவில் காணலாம். "மின்னல் நீலம்/மின்னிக்கான நேரம்?" என்று தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் கவனமீர்த்து வருகிறது. 

From Around the web