நடிகை பவித்ரா ஜெயராம் கார் விபத்தில் இறக்கவில்லை..! கணவரின் அதிர்ச்சி பேட்டி..!  

 
1
பிரபல கன்னட தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார் என்று  செய்திகள் வெளியானது.

ஆனால் இது குறித்து அவரது கணவர் கூறிய போது ’பெங்களூரில் இருந்து நாங்கள் ஹைதராபாத் சென்று கொண்டிருந்த போது முன்பு முன்னே சென்று கொண்டிருந்த பேருந்தை டிரைவர் முந்த முயன்றார். அப்போது திடீரென பஸ் மீது உரசிதால் கார் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்து காரை திருப்பினார். அப்போது எதிரே வந்த பஸ் மோதியதால் விபத்து ஏற்பட்டது.
 
இந்த விபத்தில் டிரைவர் உள்பட யாருக்கும் பெரிய அளவில் காயமில்லை, பவித்ரா ஜெயராமனுக்கும் சிறிய காயம் தான் ஏற்பட்டது. ஆனால் என்னுடைய தலையில் காயம் ஏற்பட்டதை பார்த்து பவித்ரா அதிர்ச்சி அடைந்தார், அந்த அதிர்ச்சியில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தான் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது’ என்று கூறினார்.

’எனக்கும் பெரிய அளவில் காயம் இல்லை, ஆனால் என்னுடைய தலையில் ஏற்பட்ட ரத்தத்தை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்ததால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக டாக்டர்களும் கூறியுள்ளனர்’ என்று பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web