குக் வித் கோமாளி புகழ் நடிகை பவித்ரா வீட்டில் நடந்த துயரம்..!!
மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ’ஓ காதல் கண்மணி’ படத்தில் துணைநிலை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பவித்ரா லக்ஷ்மி. அதை தொடர்ந்து நாய் சேகர், உல்லாசம், யூகி மற்றும் மலையாளத்தில் அத்ரிஷ்யம் படங்களில் நடித்துள்ளார்.
எனினும் ‘குக் வித் கோமாளி- சீசன் 3’ நிகழ்ச்சியில் தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது. அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில வெப் சிரீஸுகளிலும் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவித்ரா லக்ஷ்மி மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 7 நாட்களுக்கு முன்னர் தனது தாய் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டதாகவும், ஒரு தனி பெண்ணாக தன்னை அவர் வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டார் என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு காண்போரை கண் கலங்கச் செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பவித்ரா லக்ஷ்மியின் அம்மாவுக்கு உடல்நலக்குறைவு இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் உரிய சிகிச்சையிலும் இருந்து வந்துள்ளார். எனினும் எதுவும் பலனிக்காமல் முடிவில் அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பலரும் நடிகை பவித்ரா லக்ஷ்மிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.