இறந்ததாக சொல்லப்பட்ட நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட வீடியோ..!
Feb 3, 2024, 19:18 IST
மாடலிங் துறையில் பிரபலமான பூனம், நஷா என்ற திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.கடந்த 2021 -ம் ஆண்டு பூனம் பாண்டே, அவரது காதலர் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நேற்று அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் குறித்து பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது நான் உயிரோடு தான் இருக்கிறேன் என்று கூறி வீடியோக்களை வெளியிட்டுள்ளார் பூனம் பாண்டே.
Death To Cervical Cancer என்ற புற்றுநோய் விழிப்புணர்வு செய்வதற்காக தான் இதை செய்ததாக பூனம் பாண்டே தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.