ரியாலிட்டி ஷோவில் போட்டியாளரின் கண்ணத்தை கடித்த நடிகை ..!

 
நிகழ்ச்சியில் போட்டியாளரை கடிக்கும் பூர்ணா
தெலுங்கின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் தன்னை விட வயது குறைந்த போட்டியாளர் ஒருவரை நடிகை பூர்ணா கன்னத்தில் கடித்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பூர்ணா கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அவர் நடித்துள்ளார்.

மேலும் பூர்ணா நடிப்பில் வெளியான வெப் சிரீஸ் ரசிகர்களிடையே கவனமீர்த்தது. குறிப்பாக இந்த வலை தொடர் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக தெலுங்கு ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடனத்தை மையமாக தயாரிக்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பூர்ணா நடுவராக உள்ளார். சமீபத்தில் ஒளிப்பரப்பான எபிசோடு ஒன்றில் நடனமாடிய போட்டியாளரை பெரிதும் பாராட்டினார். அப்போது அவரை அருகில் அழைத்து கன்னத்தை கடித்தார். இந்த புகைப்படங்கள் உடனடியாக சமூகவலைதளங்களில் வெளியாகின.

இதன் காரணமாக பூர்ணாவின் செய்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் நிகழ்ச்சி தயாரித்துள்ளதாகவும் நிகழ்ச்சிக் குழு மீது விமர்சனம் எழுந்துள்ளது. சமீபத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான ‘தலைவி’ படத்தில் பூர்ணா சசிகலா கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web