அம்மாவானார் நடிகை பூர்ணா- என்ன குழந்தை தெரியுமா..??
கேரளாவைச் சேர்ந்த நடிகை பூர்ணா, இஸ்லாம் பின்னணியைச் சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் ஷம்னா காஸிம். சினிமாவில் நடிப்பதற்காக தன் பெயரை பூர்ணா என்று மாற்றிக்கொண்டார். மலையாளத்தில் ’மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்கிற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்கிற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து அர்ஜுனன் காதலி, ஆடு புலி, ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவர் கடைசியாக தமிழில் விஸ்திரன் என்கிற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் அண்மையில் தெலுங்கில் வெளியான ‘தசரா’ படம் பெரும் ஹிட்டடித்துள்ளது. நடிகை பூர்ணா கண்ணாமூச்சி, நவரஸா, த்ரீ ரோஸஸ், ஆனந்தம் போன்ற வலை தொடர்களிலும் நடித்து முடித்துள்ளார்.
கடந்தாண்டு ஜூன் மாதம் தொழிலதிபர் ஷானித் ஆசிஃப் அலி என்பரை திருமணம் செய்துகொண்டார். சினிமாவில் நடிக்காமல் தெலுங்கில் தயாரான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். திருமண்மான மூன்றாவது மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் அறிவித்தார்.
இந்நிலையில் நடிகை பூர்ணாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலையும் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து கூறி வருகின்றனர்.