விஜய் டிவி சீரியலில் இருந்து நடிகை பிரேமி வெங்கட் விலகல்..!!
விஜய் டிவியில் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்ற சீரியல் ‘கண்ணே கலைமானே’. இந்த சீரியலில் பிரபல சீரியல் நடிகை பிரேமி வெங்கட், விஜயலட்சுமி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வந்தது.
இந்நிலையில் நடிகை பிரேமி வெங்கட் விலகவுள்ளதாக சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. அது தற்போது உறுதியாகியுள்ளது. நடிகை பிரேமி வெங்கட் அதிகாரப்பூர்வமாக, ‘கண்ணே கலைமானே’ சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகை உஷா எலிசபெத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கண்ணே கலைமானே’ சீரியலில் இருந்து விலகியது குறித்து நடிகை பிரேமி வெங்கட் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் வணக்கம். ‘கண்ணே கலைமானே’ சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினேன். அந்த சீரியலில் விஜயலட்சுமி கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி. வேறோரு பயணத்தில் விரைவில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.