பிரபல நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்ற விழா மேடை சரிந்து விழுந்தது!

 
1

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். தற்போது ஜெயம் ரவி நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தெலங்கானாவின் தோரூரில் மால் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் நடிகை பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் ஒரு சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. நடிகை பிரியங்கா மோகனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விழா மேடை என்பது ஒரு சிலரே ஏறி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மேடையில் அதிகளவில் ஆட்கள் நின்றது தான் மேடை சரிந்த விபத்து ஏற்பட காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகை பிரியங்கா மோகன் பங்ககேற்ற விழா மேடை சரிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அவருக்கு என்னாச்சு என்று ரசிர்கள் பலரும் அக்கறையுடன் விசாரித்து வருகிறார்கள். இதனிடையே தான் நலமாக இருப்பதாகவும். லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டிருப்பதாக பிரியங்கா மோகன் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.


 


 

From Around the web