இனி இது போதும்- நடிகை ரச்சிதா எடுத்த திடீர் முடிவு..!!

கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது எதிர்கால வாழ்க்கை குறித்து நடிகை ரச்சிதா அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
rachitha

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. மேலும் பல்வேறு தொடர்களை நடித்துள்ளதன் மூலன், சின்னத்திரையில் அவர் முக்கிய நடிகையாக இருந்தது வருகிறார்.

விஜய் தொலைக்காட்சி மட்டுமின்றி ஜீ தமிழ் டிவி-யில் ஒளிப்பரப்பான தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். பிரிவோம் சந்திப்போம் என்கிற தொடரில் அவர் நடித்த போது, உடன் நடித்த நடிகர் தினேஷ் கோபால்சாமியை காதலிக்க துவங்கினார்.

இருவரும் 2013-ம் ஆண்டு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர். எனினும், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இன்னும் விவகாரத்துக்கு விண்ணப்பிக்கவில்லை.

bigg boss rachitha

இந்நிலையில் பாம்பே உயர்நீதிமன்றம், நாட்டில் தனியாக வாழும் பெண்கள் அல்லது கணவரை பிரிந்து வாழும் பெண்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம் என்கிற உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட ரச்சிதா, “இனி இது போதும்டா” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் விரைவில் ரச்சிதா ஒரு குழந்தையை தத்தெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தினேஷ் கோபால்சாமியுடனான பிரிவுக்கு காரணம் குழந்தையின்மை பிரச்னை தான் என்று கூறப்பட்டது. தினேஷ் குடும்பத்தினர் குழந்தையை விரும்பியதாகவும், ஆனால் ரச்சிதா அதற்கு இடமளிக்காமல் சீரியலில் நடிக்க கவனம் செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

From Around the web