டெங்கு காய்ச்சலால் நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி..!

சென்னை நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகை ராதிகா. மருத்துவர்கள் தெரிவித்ததின்படி, அவர் மேலும் 5 நாட்களுக்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராதிகா, இயக்குநர் பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர். தனது இயல்பான நடிப்புத் திறமையால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனிச்சிறப்பு பெற்றுள்ளார். பல்வேறு முக்கிய திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருக்கும் அவர், பிலிம்பேர், நந்தி போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ் திரைப்படங்களுக்கு அப்பால், தெலுங்கு திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராதிகா, 'சித்தி', 'அண்ணாமலை', 'வாணி ராணி' போன்ற சீரியல்களின் மூலம் தொலைக்காட்சி ரசிகர்களிடமும் பிரபலமானவர்.
சினிமா, சின்னத்திரை உலகில் பல சாதனைகள் புரிந்த நடிகை ராதிகா, தற்போது சிகிச்சை பெற்று விரைவில் மீண்டு வருவார் என அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் அவரின் விரைவான மீட்சி மற்றும் நலனை வேண்டி சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.