நடிகை ராதிகா சரத்குமாரின் நெகிழ்ச்சியான டிவீட்..!

 
1

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வந்த நடிகர் சரத்குமார் அந்த கட்சியை பாஜகவுடன் இணைத்து விருதுநகர் தொகுதியில் தனது மனைவி ராதிகா போட்டியிட வாய்ப்பை பெற்றார். இந்த தொகுதியில் ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் தீவிர பிரச்சாரம் செய்தனர் என்றும் இவர்களுக்கு ஆதரவாக களம் இருந்ததாகவும் கூறப்பட்டது. 

ஆனால் தேர்தல் முடிவு வெளிவர தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ராதிகா தோல்வி முகத்தில் இருந்தார் என்றும் இரண்டாவது இடம் கூட அவரால் பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே தொகுதியில் போட்டியிட்ட கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் தோல்வியை தழுவியுள்ள நிலையில் இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். 

இந்த நிலையில் தோல்வி அடைந்தாலும் தனது மக்கள் நல பணி மற்றும் சமூக பணி தொடரும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ராதிகா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

எனது அரசியல் பயணத்தில் நான் முதன்முறையாக விருதுநகர் பாராளுமன்றத் தேர்தல் 2024 - இல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் கண்டதில், எனக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

விருதுநகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது தெரிவித்தது போல, மக்களுக்கான எனது செயல்பாடும், சமூக  பணியும், மக்கள்நல பணியும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


 

From Around the web