அடிபட்ட முகம் எப்படி அழகானது- நடிகை ரைஸா விளக்கம்..!

 

சில நாட்களுக்கு முன்பு அழகான புகைப்படத்தை பகிர்ந்தது தொடர்பான விளக்கத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ரைஸா.

தமிழகத்தின் ஊட்டியை சேர்ந்த ரைஸா வில்சன் பெங்களூருவில் மாடலிங் செய்து வந்தார். தொடர்ந்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவருக்கு மிகப்பெரிய வரவேற்பு உருவானது.

அதை தொடர்ந்து சினிமாவில் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். அதற்குள் கொரோனா சூழல் காரணமாக சினிமா படப்பிடிப்பு பணிகள் முடங்கின.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் பைரவி செந்தில் என்கிற சரும நிபுணரிடம் முகப் பொலிவுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ரைஸா. அதனால் முகத்தில் காயம் ஏற்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் இருதரப்புக்கும் இடையில் சர்ச்சைகள் எழுந்தன. தற்போது இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறு வருகிறது. இருவரும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்காடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் முகம் சரியான அழகான புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார் ரைஸா. எப்படி முகம் சரியானது என்று ரசிகர்கள் பலர் அவரிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதுகுறித்து இன்ஸ்டாவில் விளக்கம் அளித்துள்ள நடிகை ரைஸா, புதிய மருத்துவரை சந்தித்து அவரிடம் சிகிச்சை  எடுத்துக்கொண்ட ஐந்து வாரங்களுக்கு பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
 

From Around the web