நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு விரைவில் திருமணம்..?

 
1

‘தேவ்’, ‘என்.ஜி.கே’ , ‘தீரன் அதிகாரம் ஒன்று’,உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர், ரகுல் ப்ரீத் சிங். கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்திலும் நடித்துள்ள அவர், சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ‘அயலான்’ பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது...

அவர் இந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானியைக் காதலித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் தங்கள் காதலை அறிவித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் குறித்து இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

1

இருவரும் பிப்ரவரி 22-ம் தேதி கோவாவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர். திருமணத்துக்கு முன் அவர்கள் இப்போது தாய்லாந்தில் ஓய்வெடுத்து வருகின்றனர்.

 

From Around the web