பிரபல நடிகைக்கு ’திடீர்’ அறுவை சிகிச்சை..!

 
பிரபல நடிகைக்கு ’திடீர்’ அறுவை சிகிச்சை..!

சமீபத்தில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள விபரங்கள் தெரியவந்துள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

தமிழில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகளான இவர் ஆரம்பத்தில் திரையுலகின் காலூன்ற மிகவும் போராடினார். அந்த நேரத்தில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் குக் வித் கோமாளி.

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பான முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியனுக்கு வரவேற்பு குவிந்தது. அதை தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன்மூலம் அவருக்கான வரவேற்பு மேலும் அதிகரித்தது.

தற்போது தமிழ் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பரபரப்பாக இயங்கி வரும் நடிகை ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ரம்யா பாண்டியன் தற்போது நலமாக இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரியவந்துள்ளது.

இந்த தகவலால் பதற்றம் அடைந்துள்ள ரம்யா பாண்டியன் ரசிகர்கள், அவர் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

From Around the web