நடிகை ரவீனாவின் தந்தை திடீர் மரணம்.!

 
குடும்பத்தினருடன் நடிகை ரவீனா
பிரபல டப்பிங் கலைஞரும் திரைப்பட நடிகையுமான ரவீனாவின் தந்தை ரவி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது திரையுலகத்தினரை சோகமடையச் செய்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி டப்பிங் கலைஞரான ஸ்ரீஜாவின் மகள் தான் ரவீனா ரவி. தமிழ், மலையாளப் படங்களுக்கு டப்பிங் கொடுத்து வந்த இவர், கடந்த 2017ம் ஆண்டு ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.  எனினும் தொடர்ந்து டப்பிங் கொடுத்து வருகிறார்.

எமி ஜாக்சன், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் போன்ற கதாநாயகிகளுக்கு இவர் தான் ஆஸ்தான டப்பிங் கலைஞராக இருந்தார். ஸ்ரீஜாவின் கணவர் ரவீந்திரநாத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவீனாவின் தந்தை மறைவிற்கு நடிகர் விஷால் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web