‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இணைகிறாரா நடிகை ரேவதி..? அதுவும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு..!

 
1

 விஜயின் கடைசி படம் என்பதால் ‘ஜனநாயகன்’ படம் குறித்த எதிர்பார்த்து மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.படப்பிடிப்பு பணிகள் தற்போது கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடிகை ரேவதி இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தில் ரேவதி இணைந்திருக்கிறார்.

நடிகை ரேவதி இதற்கு முன் 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தில் விஜய்க்கு சகோதரியாக நடித்திருந்தார். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் விஜய்க்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web