திடீர் உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் ரோஜா அனுமதி..!!

தமிழ் மற்றும் தெலுங்கில் 90-களின் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. பிறகு இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்துகொண்டு 2 குழந்தைகளுக்கு தாயான அவர், தீவிர அரசியலில் ஈடுபடத் துவங்கினார்.
தனது சொந்த மாநிலமான ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்னைகளை களத்தில் நின்று போராடி தீவிர அரசியல்வாதியாக மாறினார். இதுவரை 3 கட்சிகள் மாறிவிட்ட நிலையில், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன் மோகம் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அங்கு தீவிர மக்கள் பணிகளில் ஈடுபட்டதால், நகரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் வெற்றிபெற்ற அவர், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்தமுறை நடந்த தேர்தலில் பெரியளவில் வெற்றிபெற்ற ரோஜாவுக்கு அண்மையின் தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
எனினும் அவ்வப்போது அரசியல் பணிகளுக்கு இடையே, ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் டிவி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ரோஜா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவருக்கு ஏற்கனவே நிறைய உடல்நலப் பிரச்னைகள் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாக அவருக்கு கால் வலி அதிகம் இருந்துவந்ததாம். ஆனால் சமீப நாட்களாக அவருடைய கால்கள் திடீரென வீக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவட்டு வருகிறது. விரைவில் குணமடைந்த ரோஜா வீடு திரும்புவார் என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன.