லவ் என்பது ஒரு ஆண்-பெண் இடையே தான் என்று இல்லை - நடிகை சமந்தா விளக்கம்..!!
நடிகை சமந்தா பல வருட காதலுக்கு பிறகு தான் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். பல வருடங்களாக அவர்கள் எல்லோரும் திரும்பி பார்க்கும் அளவுக்கு நட்சத்திர ஜோடியாக வலம் வந்த நிலையில் கடந்த 2021-ல் திடீரென விவகாரத்தை அறிவித்தனர். தற்போது சமந்தா குடும்ப வாழ்க்கைக்கு டாட்டா காட்டிவிட்டு முழுநேரமாக சினிமாவில் தான் கவனம் செலுத்தி வருகிறார். மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்நிலையில் அடுத்த படமான சாகுந்தலம் படத்திற்காக பேட்டிகள் கொடுத்து வருகிறார் சமந்தா.
விவகாரத்துக்கு பிறகு ‘லவ்‘ என்பதற்கு என்ன அர்த்தம் மாறி இருக்கிறது என ஒரு பேட்டியில் கேட்டதற்கு, “லவ் என்பது ஒரு ஆண்-பெண் இடையே தான் என்று இல்லை. தற்போது லவ் என்றால் என் நண்பர்கள், கடந்த 8 மாதங்களாக என் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். நானும் அன்பை கொடுக்கிறேன். அதிகம் காதலுடன் தான் இருக்கிறேன். ஒரு ரிலேஷன்ஷிப் தோல்வியில் முடிந்ததால் நான் நம்பிக்கை இல்லாத, கசப்பான ஒருவராக மாறிவிடவில்லை“ என நடிகை சமந்தா கூறியுள்ளார்.