நயன்தாரா பிறந்த நாளில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகை சமந்தா..!!

 
1

நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா .இவரும்  டைரக்டர் விக்னேஷ் சிவனும் 5 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.அடிக்கடி இவர்கள் சேர்ந்து வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், கோவில்களில் சாமி கும்பிடுவதையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு தமது காதலை உறுதிப்படுத்தியும் வருகிறார்கள். 

அப்படிப்பட்ட லேடி சூப்பர்ஸ்டார்-க்கு இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் இன்று தனது பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் விமரிசையாக கொண்டாடினார். கேக் வெட்டி கொண்டாடிய பிறந்தநாள் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவனை அன்பாக கட்டி அணைத்து அன்பை பரிமாறிம் நயன். நயன் தாராவின் பிறந்தநாளுக்கு திரைத்துறையினர், நண்பர்கள், அவரது ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இந்த பிறந்தநாள் விழாவில் நடிகை சமந்தாவும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


 

From Around the web