ரசிகரின் கேள்விக்கு தரமான பதில் சொன்ன நடிகை சமந்தா!
நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கு ஆண்டுகளில் அதாவது 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார் நடிகை சமந்தா.
இதனை அடுத்து அவர் மறுமணம் செய்து கொள்வாரா? என கடந்த இரண்டு ஆண்டுகளாக கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய போது இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். மறு திருமணம் செய்ய வாய்ப்பு இருக்கா? என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சமந்தா ஒரு புள்ளி விவரத்தை பதிவு செய்து உள்ளார்.
அதில் ’2023 ஆம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணம் செய்து கொண்டவர்களின் விவாகரத்து சதவீதம் 50% என்றும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர்களின் விவாகரத்து சதவீதம் 67% என்றும், மூன்றாவது திருமணம் செய்து கொண்டவர்களின் விவாகரத்து சதவீதம் 73% என்றும் பதிவு செய்துள்ளார்.
அதாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது திருமணம் செய்து கொண்டவர்களின் விவாகரத்து சதவீதம், முதல் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்ததை விட அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டிய சமந்தா, இரண்டாவது திருமணம் குறித்து தனக்கு எந்த விதமான ஐடியாவும் இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.