பிரபல யோகா மையத்தில் நடிகை சமந்தா தியானம்..!

 
1

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டுள்ளார். தற்போது மீண்டும் படத்தில் நடிக்க தயாராகும் சமந்தா, சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளனர். அதன் முதல் படமாக, ‘மா இண்டி பங்காரம்’ உருவாகிறது. அதில் ஆக்சன் நாயகியாக நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்வதை போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா இன்று வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பகிர்ந்து சமந்தா பதிவிட்டுள்ளதாவது:-

நம்மில் பலரும் குரு அல்லது ஆலோசகரை தேடுகிறோம். நம் வாழ்க்கையை ஒளிரச் செய்பரைக் காண்டால், அது அரிய பாக்கியமாகும். ஞானம் வேண்டுமென்றால், அதனை உலகில் நீங்கள்தான் தேட வேண்டும்.
ஏனென்றால் நாள்தோறும் உங்கள் மீது பல்வேறு விஷயங்கள் திணிக்கப்படுகிறது. ஞானத்தை பெறுவது சாதாரணமானது அல்ல. அதற்காக நீங்கள்தான் உழைக்க வேண்டும். நீங்கள் பலவற்றை தெரிந்து வைத்துக் கொள்வது மட்டும் போதாது. அதனை செயல்படுத்துவதே முக்கியமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி கோவை ஈஷா யோகா மையத்துக்கு செல்லும் சமந்தா தியானத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக ஆண்டுதோறும் ஈஷா யோகா மையத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறும் சிவராத்திரி விழாவில் சமந்தா கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

From Around the web