செல்லப்பிராணியுடன் விளையாடும் நடிகை சமந்தா..! வைரல் வீடியோ!!

 
1

‘பாணா காத்தாடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், சமந்தா. அந்த படத்தில் அவர், அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்த இவர் ஆரம்பத்தில் பிற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.

அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்ததால், வீட்டை ஐதராபாத்துக்கு மாற்றிக்கொண்டார். அப்போதுதான் இவருக்கும், நாக சைதன்யாவுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தான் ஆசையாக வளர்த்து வரும் நாயின் குறும்பு சேட்டைகளையும் வீடியோ எடுத்து பதிவிடுவது வழக்கம்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சமந்தாவுக்கு ஈடு கொடுத்து அவரது செல்லப்பிராணியும் பலூன் விளையாடுகிறது.

From Around the web