என் அம்மா மீது தான் வருத்தம்: சமந்தா ஓபன்..!!

சாகுந்தலம் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சமந்தா, நிகழ்ச்சியொன்றில் தனது அம்மா குறித்து பேசியுள்ளது கோலிவுட் சினிமாவில் கவனமீர்த்துள்ளது.
 
samantha

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, நடிகை சமந்தா வீரியத்துடன் திரையுலகில் செயல்பட்டு வருகிறார். எனினும் தன்னுடைய உடல்நலன் பாதிப்பு காரணமாக, சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளார்.

குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ படம் வரும் 14-ம் தேதி வெளிவரவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகள் டப் செய்யப்பட்டு இந்த படம் வெளிவருகிறது.

தமிழ், தெலுங்கு மொழிகளுக்கான ப்ரோமோஷன்களை சமந்தா முடித்துவிட்டார். இப்போது மலையாளம், கன்னடம் பதிப்புகளுக்கான ப்ரோமோஷன்களை அவர் செய்து வருகிறார். இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், படக்குழுவுடன் அவர் பங்கேற்று பேசினார்.

எனக்கு எப்போதும் மலையாளப் படங்களை பார்ப்பதிலும், மலையாளப் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் மிகுதியாக உள்ளது. என் அம்மா கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தும், எனக்கு மலையாள மொழியை கற்றுக்கொடுக்காமல் விட்டுவிட்டார். அதனால் அவர் மீது எனக்கு இப்போதும் ஒரு வருத்தம் உள்ளது.

மலையாள நடிகர்களை எனக்கு மிகவும் நடிக்கும், அவர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்தால் நிச்சயம் மலையாளம் கற்றுக்கொள்வோன். இங்குள்ள நடிகர்கள் தனித்தன்மை கொண்டவர்கள். நடிப்பில் வித்தியாசம் காட்டுவதற்கு நான் மலையாளப் படங்களை பார்த்து கற்றுக்கொள்வோன் என்று சமந்தா பேசினார்.
 

From Around the web