600 படிகள் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்த நடிகை சமந்தா..!!

‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.
தற்போது புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியிள்ள ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்துள்ளார். பிரம்மாண்டமாய் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் சாகுந்தலம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் விஜய் தேவர கொண்டாவின் குஷி படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா அரிய வகை தசை அழற்சி நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இதனால் தன்னால் படுக்கையில் இருந்து கூட ஒரு சில நாட்கள் எழ முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு கடுயைமான வலியை அனுபவித்து வருவதாகவும் உருக்கமாக கூறியிருந்தார். இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் நடிகை சமந்தாவுக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
தொடர்ந்து தனது அரிய நோய்க்காக உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் சிகிச்சை பெற்று வருகிறார் சமந்தா. உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல் படப்பிடிப்புகளில் பங்கேற்பதையும் புரமோஷன்களில் பங்கேற்பதையும் கடமை தவறாமல் செய்து வருகிறார். சில சமயம் தன்னையும் மீறி மேடை நிகழ்ச்சிகளில் சமந்தா கண்ணீர் விட்டு அழுதுவிடுகிறார்.
பழனி ஸ்ரீபாலதண்டாயுத பாணி திருக்கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் .... @Samanthaprabhu2#Samantha #PalaniMuruganTemple #Palani pic.twitter.com/HFrTEfmoDk
— Viji Nambai (@vijinambai) February 13, 2023
பழனி ஸ்ரீபாலதண்டாயுத பாணி திருக்கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் .... @Samanthaprabhu2#Samantha #PalaniMuruganTemple #Palani pic.twitter.com/HFrTEfmoDk
— Viji Nambai (@vijinambai) February 13, 2023
இந்நிலையில் நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலில் உடல் நலம் பெற வேண்டி வழிபாடு செய்துள்ளார். பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார் நடிகை சமந்தா. நடிகை சமந்தா பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. படி வழி பாதையில் நடந்து சென்ற சமந்தா 600 படிகளிலும் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்துள்ளார்.
சமந்தா பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் நீங்கள் நலம் பெருவீர்கள், நம்பிக்கையுடன் இருங்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர். நடிகை சமந்தா சமீப காலமாக எப்போதும் கைகளில் ஜெப மாலையுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.