பெண்களை பாலியல் பொருளாக கருத வேண்டானு உங்கள் மகன்களுக்கு சொல்லி கொடுங்க - நடிகை சமந்தா அட்வைஸ்
Jan 4, 2022, 07:05 IST

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா அடிக்கடி தனது கருத்துக்களை பதிவிட்டு வருபவர். இந்த நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில், பெண்களை பாலியல் பொருளாக கருத வேண்டாம் என்று அறிவுரையாக புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதிலு, உங்கள் மகள்களிடம் ‘செக்ஸியாக இருக்க வேண்டாம்’ என்று சொல்லி கொடுப்பதற்கு பதிலாக, உங்கள் மகன்களிடம் பெண்களை பாலியல் பொருளாக கருத வேண்டாம் என கற்றுக்கொடுங்கள் என கோரிக்கை விடுத்தார்.
உங்கள் மகளுக்கு பாலியல் உரிமையை மறுக்கிறீர்கள் என்றால் அது பெண் குழந்தைகளை புறக்கணிப்பதற்கு சமம். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.