எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேற முடிவு செய்த ’ஆதிரை’- காரணம் இதுதான்..!!
 

பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து நடிகை சத்யா வெளியேறிவிட வேண்டும் என்கிற முடிவில் இருந்ததாக தெரிவித்துள்ளது சின்னத்திரையில் பேசுபொருளாகியுள்ளது.
 
sathya devarajan

சீரியலில் உலகில் டி.ஆர்.பி-யில் முன்னணியில் இருந்து வரும் தொடர் எதிர்நீச்சல். சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மிகப்பெரிய பார்வையாளர்கள் வட்டம் உண்டு.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த சீரியலை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இந்த சீரியலில் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களுடைய நடவடிக்கைகளை வைத்து மீம் போடும் அளவுக்கு பெரிய ஹிட்டாகியுள்ளது. 

ethir neechal

எதிர்நீச்சல் தொடரில் மைய கதாபாத்திரங்களில் ஒன்று ஆதிரைச் செல்வி. இதில் சத்யா என்பவர் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இதுவொரு வில்லி கதாபாத்திரமாக இருந்தது. அதனால் ரசிகர்களிடம் இருந்து பல எதிர்மறை விமர்சனங்களை சத்யா பெற வேண்டியதாக இருந்தது.

இதனால் அவர் தொடரை விட்டே வெளியேறிவிட முடிவு செய்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, அவருடைய வில்லி கதாபாத்திரம் நல்ல ஒரு பாத்திரப் படைப்பாக மாறியது. சமீபத்தில் அவருடைய கதாபாத்திரத்துக்கு பரபரப்பான கட்டத்தில் திருமணம் நடைபெற்றது.

ethir neechal

இதை ஒட்டுமொத்த தமிழகமுமே ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்தது. தன்னுடைய கதாபாத்திரத்துக்கு இப்படியொரு வரவேற்பு ஏற்பட்டுள்ளது பெருமையாக இருப்பதாக சத்யா தெரிவித்துள்ளது. ஒருவேளை தொடரில் இருந்து வெளியேறி இருந்தால், தான் நிச்சயமாக காணாமல் போயிருப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

From Around the web