விவகாரத்து பெற்றதை போட்டோஷூட் நடத்தி கொண்டாடிய நடிகை..!!

பிரபலமான சின்னதிரை நடிகை ஷாலினி தனக்கு விவகாரத்து கிடைத்ததை போட்டோஷூட் நடத்தி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
 
 shalini

தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடர் மூலம் பிரபலமானவர் ஷாலினி. இவர் கண்டநாள் முதல், ஜெயம் உள்ளிட்ட படங்களில் துணைநிலை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ் சின்னத்திரையில் கால்பதித்த அவர் வள்ளி திருமணம், முள்ளும் மலரும் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு ரியாஸ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது ரியா என்கிற பெண் குழந்தையும் உள்ளது. தனது மகளுடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்கிற நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதன்மூலம் அவருக்கு சின்னத்திரை உலகிலும் நன்கு பிரபலம் கிடைத்தது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக  கணவரிடம் இருந்து ஷாலினி சமீபத்தில் தனது கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்றுள்ளார். அதற்கான தனியாக போட்டோச் ஷூட் நடத்தி, தனக்கு விவகாரத்து கிடைத்ததை அவர் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தனது இன்ஸ்டா பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். 

அத்துடன், ஒரு விவகாரத்து பெற்ற பெண்ணாக நான் கூற விரும்புவது என்னவென்றால், ஒரு கெட்ட திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதில் எந்த தவறும் கிடையாது. உங்கள் வாழ்க்கை சார்ந்த முடிவுகளை நீங்களே எடுங்கள், அதில் மாற்றம் தேவைப்பட்டால் செய்துகொள்ளுங்கள். அதை வைத்து ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிடுங்கள். விவகாரத்து என்றுமே ஒரு தோல்வி கிடையாது. அது வாழ்க்கையில் கிடைக்கும் திருப்புமுனையாகும். திருமணத்தை விட்டுவிட்டு தனித்து நிற்க அதிக தைரியம் வேண்டும். எனவே எனது துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் நான் இதை அர்ப்பணிக்கிறேன். இப்போது என்னுடைய 99 பிரச்சனைகள் தீர்ந்துவிட்டன என்று தனது பதிவில் நடிகை ஷாலினி குறிப்பிட்டுள்ளார்.
 

From Around the web