நடிகர் அஜித்தின் ரேஸிங் வீடியோவை பகிர்ந்த நடிகை ஷாலினி!
 Oct 30, 2024, 06:35 IST
                                        
                                    
                                 
                                    
                                நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி,குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.இது ஒரு புறம் இருக்க அஜித் அவர்கள் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துவார் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும்.
இந்நிலையில் தற்போது வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் குறித்த இந்த நிறுவனத்தின் மூலம் சுற்றுலாப்பயணிகளிற்கு ஒரு வழிகாட்டி சேவை ஒன்றை ஆற்றவுள்ளார் மற்றும் இவர் துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார் குறித்த பந்தய காரினை ஓட்டும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இது குறித்த வீடியோ தற்போது நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
 - cini express.jpg)