ராஜ் குந்த்ராவை பிரியும் நடிகை ஷில்பா ஷெட்டி..?

 
கணவருடன் ஷில்பா ஷெட்டி
கணவர் ராஜ் குந்த்ரா தொடர்பான பிரச்னை எதுவுமில்லாமல் அவருடைய மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டி புது வாழ்க்கையை துவங்க விரும்புவதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தொழிலதிபரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா, மாடல் அழகிகளை வைத்து ஆபாசப் படங்களை தயாரித்து வியாபாரம் செய்ததாக கூறி மும்பை போலீசார் அவரை கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர்.

இந்த வழக்கில் இருக்கும் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக இருப்பதால், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபனமாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவர் ராஜ்குந்தராவுடன் வசித்து வந்த வீட்டில் இருந்து வெளியேற ஷில்பா ஷெட்டி முயற்சித்து வருகிறார். அவர் தொடர்பான பிரச்னைகள் எதுவுமில்லாமல் வாழ்வதற்கும் ஷில்பா முடிவு செய்துள்ளதாக பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

From Around the web