நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ்குந்த்ரா கைது- அதிர்ச்சியில் பாலிவுட் ..!

 
ராஜ்குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி

ஆபாச பட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளது தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மும்பை போலீசார் ஆபாச படங்கள் தயாரிக்கப்படுவது குறித்து புகாரை விசாரித்து வந்தனர். அப்போது நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் பிரபல தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா சில செயலிகள் மூலம் ஆபாச படங்களை தயாரித்து விநியோகம் செய்தது தெரியவந்தது.

அதற்கான விசாரணையில் ஈடுபட்டு வந்த மும்பை காவல்துறை தற்போது ராஜ்குந்தராவை கைது செய்துள்ளது. இதுதொடர்பாக மும்பை காவல் ஆணையர் அலுவலகம் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவில் ஆபாச படங்கள் தயாரிக்கப்படுவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு தொடரப்பட்டது. அதற்கான விசாரணையில் போதிய ஆதாரங்களுடன் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் முக்கிய குற்றவாளியாக இருப்பது தெரியவந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web