நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி!!
Jan 11, 2022, 05:05 IST

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் ஷோபனா. இவர், இது நம்ம ஆளு, பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி உளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர், தமக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு ஆகியவை அறிகுறிகளாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் படிபடியாக அந்த அறிகுறிகள் குறையத்தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.
தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ள ஷோபனா, அது வைரசில் இருந்து 85 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.