பிரபல தயாரிப்பாளரை செருப்பால் அடித்த நடிகை..! 

 
1

தயாரிப்பாளர் கரண் சிங் செளகான் மீது ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக மும்பை ஓசிவாரா பொலிஸில் புகார் பதிவு செய்துள்ளார் பாலிவுட் நடிகை ருச்சி குஜார்.ருச்சியின் புகாரின்படி, கரண் சிங் செளகான் முதலில் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டு, தனது கே ஸ்டூடியோ நிறுவனம் மூலம் ஒரு ஹிந்தி சீரியலை தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார். 

இதனை நம்பிய ருச்சி, 2023-24ம் ஆண்டில் பல்வேறு காலக்கட்டங்களில் 25 லட்சம் அவருக்கு Transfer செய்ததாக கூறினார். ஒப்பந்த ஆவணங்களும் அவரது வசம் உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், வாக்குறுதியின்படி எந்த சீரியலும் தயாரிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக "So Long Valley" என்ற படத்தை அவர் தயாரித்துள்ளதாக பின்னர் ருச்சிக்கு தெரிந்துள்ளது. இந்த படம் ஜூலை 27ஆம் தேதி சினிபோலிஸ் திரையரங்கில் வெளியிட  திட்டமிடப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து ருச்சி, தனது நண்பர்களுடன் போராட்டம் நடத்த சென்ற போது, தயாரிப்பாளர்கள் மற்றும் வருகைதந்தவர்களுடன் வாக்குவாதம் வெடித்தது. கோபத்தில் ருச்சி, மற்றொரு தயாரிப்பாளரான மான் சிங்கை செருப்பால் அடித்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பொலிஸார் கரண் சிங் செளகான் மீது மோசடி மற்றும் மிரட்டல் குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From Around the web