தான் ஏமாற்றப்பட்டதாக நடிகை சினேகா போலீசில் திடீர் புகார்..!!

 
1

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சினேகா கமல்ஹாசன், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் சினேகா. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினேகா திருமணத்திற்குப் பிறகு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அவர் நடிப்பில் மட்டுமில்லாமல் கட்டுமானம் உட்பட வேறு சில தொழில்களும் செய்து வருகின்றார். 

இந்நிலையில் நடிகை சினேகா தனியார் ஏற்றுமதி நிறுவனம் மீது சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் இரண்டு தொழிலதிபர்கள் ரூ. 26 லட்சம் மோசடி செய்ததாகவும் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று கூறியதாகவும் அதை நம்பி முதலீடு செய்ததாகவும் தற்போது வட்டி கேட்டதற்கு தன்னை மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தொழிலதிபர் மீது நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web