போதைப் பொருள் வழக்கில் நடிகை சோனியா அகர்வால் கைது..!

 
சோனியா அகர்வால்
வீட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக நடிகையும் மாடல் அழகியுமான சோனியா அகர்வாலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னட சினிமாவில் இருக்கும் கலைஞர்கள் பலர் போதைப் பொருளை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் எடுத்த நடவடிக்கையில் பிரபல நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளதை அடுத்து வெளியே வந்துள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் சுற்றி திரிந்த நைஜீரியா வாலிபரை போலீசார் கடந்த 12-ம் தேதி கைது செய்தனர். அப்போது பெங்களூருவில் தங்கில் போதைப் பொருள் விற்பனையில் அவர் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ன்னட நடிகையும், மாடல் அழகியுமான சோனியா அகர்வால் உள்ளிட்ட பலருக்கு அந்த நபருடன் தொடர்பு தெரிந்தது. அதை தொடர்ந்து பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள சோனியா அகர்வாலின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் 40 கிராம் கஞ்சா போதைப் பொருளை போலீசார் கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த நடிகை சோனியா அகர்வாலை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மீண்டும் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web