நடிகை ஸ்ரீதிவ்யா- அவங்க நிலைமை இப்படியா ஆகணும்..!!

ஸ்ரீதிவ்யாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துபோனதால், சொந்த கிராமத்தில் செட்டிலாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
sridivya

வருத்தப்படாத வாலிபம் சங்கம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா பட வாய்ப்பு இல்லாததன் காரணமாக, அவர் எடுத்துள்ள முடிவு பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளியான படம் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ . அதில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் தெலுங்குப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார்.

அதை தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் சீக்கரமாகவே அவர் சீரியலுக்கு வந்துவிட்டார். அப்போது தமிழ் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதையடுத்து ஜீவா, காக்கி சாட்டை, இஞ்சி இடுப்பழகி, பெங்களூரு நாட்கள், ரெமோ போன்ற கவனிக்கத்தக்க படங்களில் நடித்தார். தமிழ் , தெலுங்கு மட்டுமில்லாமல் மலையாளப் படங்களிலும ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். எனினும் அவர் இப்போது எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

மேலும் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களுக்கு தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஒரு கிராமப் பகுதியில் வசிப்பது தெரியவந்துள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் சீக்கரம் சினிமாவுக்கு ஸ்ரீதிவ்யா திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

From Around the web