தன் இறப்பை முன்பே கணித்த நடிகை ஸ்ரீவித்யா - குட்டி பத்மினி பேட்டி..! 

 
1

தமிழ் மட்டுமல்லாது மலையாளப் படங்களிலும் தன் இயல்பான அழகுக்கும் திறமையான நடிப்புக்கும் பெயர் போனவர் நடிகை ஸ்ரீவித்யா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவருக்கு நடனத்தில் அதிக ஆர்வம் உண்டு. குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா கெரியுரை தொடங்கிய ஸ்ரீவித்யா அதன்பிறகு மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகி பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா படங்களில் நடித்திருக்கிறார். இவர் பின்னணி பாடகையாகவும் பல படங்களில் பாடல் பாடியிருக்கிறார்.

ஸ்ரீவித்யாதான் கமலை விரும்பினார். ஸ்ரீவித்யா கமல்ஹாசனை காதலித்தபோது கமல்ஹாசன் வாணி கணபதியை காதலித்தார். அப்போது ஸ்ரீவித்யா மட்டுமல்ல பல முன்னணி நடிகைகள் கமல்ஹாசனை காதலித்தார்கள். அப்போதைய காலகட்டத்தில் அத்தனை அழகு, அறிவுடன் இருந்தவர் கமல்ஹாசன். அதனால் அவரை அனைவருக்குமே பிடிக்கும். அந்த காலத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் சகஜமாக பேசிக்கொள்ள முடியாது. ஆனால் கமல்ஹாசன் அவ்வளவு சகஜமாக பேசுவார். அதனாலேயே எக்கச்சக்கமான நடிகைகளுக்கு கமல்ஹாசன் என்றால் கொள்ளப்பிரியம் என்கிறார் குட்டி பத்மினி.

அப்படி நடிகர் கமல்ஹாசனுடன் இவருக்கு ஆரம்பித்தப் பழக்கம் கைகூடாமல் போகவே, ஜார்ஜ் என்பவருடன் திருமண வாழ்க்கை ஸ்ரீவித்யாவுக்கு அமைந்தது. ஆனால், இதுவும் அவருக்கு சரியாக அமையவில்லை.

இந்த நிலையில், நடிகை குட்டி பத்மினி ஸ்ரீவித்யாவின் கடைசிக் காலம் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது, “இந்த ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் எனப் பலமுறை ஸ்ரீவித்யா என்னிடம் வருத்தப்பட்டிருக்கிறார். ஸ்ரீவித்யா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்தேன். அவர் மிகவும் சோர்வாக, நைட்டியில் இருந்தார். ‘உடம்பு சரியில்லையா?’ என நான் பதறிப் போய் விசாரித்ததற்கு அவர், ‘இன்னும் இரண்டு நாட்களில் செத்து விடுவேன். கேன்சர் வந்திருக்கிறது. அதிகபட்சம் இரண்டு, மூன்று நாட்கள்தான்’ எனச் சொல்லி அழ ஆரம்பித்து விட்டார். அவர் அப்படி பேசிய அடுத்த நாள்தான் அவரை கமல்ஹாசன் வந்து பார்த்தார். அடுத்த மூன்று நாட்களில் அவர் இறந்து விட்டார்” என்று கூறியுள்ளார் குட்டி பத்மினி. இவர் பகிர்ந்துள்ள இந்த விஷயத்தை ரசிகர்கள் உருக்கமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

From Around the web