ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை சுனைனா..!

 
1

'காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சுனைனா, அதன் பின்னர் பல  வெற்றி படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக விஜய் நடித்த ’தெறி’ திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சுனைனா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது சமூக வலைதளத்தில் ஒரு ஆணின் கையுடன் தனது கை இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் சுனைனாவுக்கு விரைவில் திருமணம் என புரிந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் அதை சுனைனா தற்போது உறுதி செய்துள்ளார்.

எனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்றும், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதையடுத்து விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சுனைனாவை திருமணம் செய்ய இருப்பவர் யார் என்பது குறித்து அவர் இன்னும் தெரிவிக்கவில்லை என்பதால் அதையும் விரைவில் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

From Around the web