கட்டுகட்டாக சிக்ஸ் பேக் வைத்திருக்கும் டாப்ஸி..!!

பல மாதங்களாக உடற்பயிற்சி செய்து, தான் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் நடிகை டாப்ஸி.
 
taapsee

டெல்லியைச் சேர்ந்த நடிகை டாப்ஸி, கடந்த 2010-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அந்த படம் வெற்றி அடைந்த நிலையில், 2011-ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கு, தமிழில் மிகவும் பிஸியான நடிகையாக மாறினார். 

கடந்த 2013-ம் ஆண்டு தனது தாய் மொழியான இந்தி மொழிப் படத்தில் அவர் அறிமுகமானார். அதை தொடர்ந்து இந்திப் படங்களில் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இதனால் இந்திப் படங்களில் நடிக்கத் துவங்கிய சில ஆண்டுகளில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஃப்லிம்பேர், ஐஃபா போன்ற முக்கிய விருதுகளை வென்றார்.

தற்போது அவர் ’வோ லடுகி ஹாய் கஹான்’ மற்றும் ’டங்கி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் டங்கி படத்தில் ஷாரூக்கான் உடன் நடித்து வருகிறார். இந்நிலையில் பல மாதங்களாக ஒர்க் அவுட் செய்து, தனது உடம்பை சிக்ஸ் பேக்குக்கு மெருகேற்றி உள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தை இணையதளத்தில் டாப்ஸி வெளியிட்டுள்ளார். இது மிகவும் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவின் பல முன்னணி நடிகைகள், டாப்ஸியின் உடலமைப்புக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இதன்மூலம் டாப்ஸி பாலிவுட் சினிமாவில் புதிய டிரெண்டை கொண்டு வந்துள்ளார்.
 

From Around the web