37 வயது இந்தி நடிகரை காதலிக்கும் 33 வயதான தமன்னா

நடிகை தமன்னா பிரபல இந்தி சினிமா நடிகரை காதலித்து வருவதாகவும், அவருடன் அடிக்கடி டின்னர் டேட் சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
tamanna bhatia

மும்பையைச் சேர்ந்த நடிகை தமன்னா இந்தி படங்கள் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அங்கு அவருக்கு வரவேற்பு இல்லாததால், தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகம் தமன்னாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. குறிப்பாக தெலுங்கு சினிமாவில் அவர் விரைவாகவே முன்னணி நடிகையாக மாறினார்.

அதேசமயத்தில் தமிழ் சினிமாவிலும் கவனிக்கத்தக்க படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுதவிர சிரஞ்சீவியுடன் போலோ சங்கர், அரண்மனை 4, மலையாளத்தில் தயாராகும் பாந்த்ரா, இந்தியில் தயாராகும் போலே சூடியான் போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார்.

vijay varma

பாலிவுட்டில் வளர்ந்து வரும் விஜய் வர்மா என்ற நடிகரை தமன்னா காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஒரு பார்டியில் இருவரும் முத்தமிடுவது போன்ற புகைப்படம் வெளியானது. ஆனால் இருவரும் அதுகுறித்து கருத்துக் கூறாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை தமன்னாவும் விஜய் வர்மாவும் அடிக்கடி மும்பையிலுள்ள பிரபல தனியார் விடுதியில் டின்னர் டேட் சென்று வருகின்றனர். இதனால் இருவரும் தீவிரமாக காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகை தமன்னாவுக்கு தற்போது 33 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. அதேபோன்று விஜய் வர்மாவுக்கு 37 வயதாகிறது, அவரும் சிங்கிள் தான். இதனால் விரைவில் இருவரும் தங்களுடைய காதலை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 

From Around the web