பழம்பெரும் நடிகை ஜமுனாவின் பயோபிக்கில் நடிகை தமன்னா ?

 
1

தென்னிந்தியாவில் பழம்பெரும் நடிகையாக இருந்த ஜமுனா,  தமிழில் கடந்த 1954-ஆம் ஆண்டு வெளியான 'பணம் படுத்தும் பாடு' படத்தின் மூலம் நடிகையான அறிமுகமானார். மிஸ்ஸிம்மா, தெனாலிராமன், தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழை விட தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். 

biopic

எம்.ஜி.ஆர், சிவாஜி, என்டி ராமராவ் உள்ளிட்ட பல மொழி நடிகர்களுடன் நடித்துள்ளார்.  ‌‌‌‌‌‌நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமைக் கொண்டு செயல்பட்டு வந்தார். நடிப்பிற்கு பிறகு ஆந்திராவில் முழு நேர அரசியல்வாதியாக நடித்து வந்தார். 86 வயதான ஜமுனா, வயது முதிர்வு காரணமாக கடந்த 27-ஆம் தேதி மரணமடைந்தார். 

biopic

இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தில் நடிகை தமன்னா, ஜமுனாவாக நடிக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் இயக்குனர் ஒருவர் இயக்கும் இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 

From Around the web