வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிகை தமன்னா..?

 
1

அஜித்குமார், சுருதிஹாசன், லட்சுமிமேனன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ல் தீபாவளி பண்டிகையில் வெளியாகி வெற்றி பெற்ற படம் வேதாளம்.

இந்தப் படத்தை சிவா இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வெளியிட்டார்.

இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. அஜித்குமார் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. பின்னர் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியானது. இதில் தங்கை லட்சுமிமேனன் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் தேர்வானார்.

சுருதிஹாசன் கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க இளம் நடிகைகள் பலரும் தயக்கம் காட்டினர். இந்த நிலையில் தமன்னா தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனில் சுக்ரா - ராம்சரண் - ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார்.

From Around the web