விரைவில் நடிகை தமன்னாவுக்கும் – விஜய் வர்மாவுக்கு டும் டும் டும்..?

 
1

முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் தமன்னா அண்மையில் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற இணைய தொடரில் தன்னோடு நடித்த நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் மற்றும் காதல் செய்து வருவதாக கூறப்பட்டது…சொல்லப்போனால் அதனை அவர்களே உறுதி படுத்தி இருந்தனர்…

அண்மையில் அவர்கள் இருவரும் இணைந்து வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டது கூட அனைவரும் அறிந்த விஷயம் தான்…தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பிஸியாக நடித்து வரும் நடிகை தான் தமன்னா..இப்பொது கவர்ச்சி நடிகையாகவே மாறிவிட்டார் அவர்..

இதுவரை கவர்ச்சியாக பல கதாபாத்திரங்கள் ஏற்று அவர் நடித்திருந்தாலும் சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற இணையத் தொடரில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது…அதில் நடித்தவருடன் காதல் என்பதை ஓப்பனாக பேசினர் இருவரும்…

இதுகுறித்து பேசிய நடிகை தம்மனா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படபிடிப்பின் போது தான் தங்களுக்குள் நெருக்கம் அதிகமாகியது என்று கூறினார்.அதன் பிறகு அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு ஒன்றாக சுற்றுலா சென்று திரும்பியதாகவும் தகவல் வெளியானது…அதன் வீடியோ நிறைய வந்தது..

இந்நிலையில் தம்மனா வீட்டில் அவருக்கு 33 வயது ஆகிவிட்டது என்று கூறி விரைவில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமன்னா மற்றும் விஜய் வர்மா ஜோடி அடுத்த வருடத்தில் தங்களுடைய திருமணத்தை முடித்து விடுவர் என தெரிகின்றது..

From Around the web