”ஆம். அவரை காதலிக்கிறேன்” உறுதி செய்த தமன்னா..!!

ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அவர் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தில் நடிக்கவுள்ளார். இதை சுந்தர். சி இயக்குகிறார். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்துக்காக இந்தியில் தயாராகும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தில் நடிக்கிறார் தமன்னா. ஆந்தாலஜி கதையமைப்பில் உருவாகும் படத்தில் விஜய் வர்மா கதாநாயகனாக நடிக்கிறார். அவரை நடிகை தமன்னா காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
அதேசமயத்தில் கோவாவின் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருவரும் முத்தமிட்டுக் கொண்ட வீடியோவும் வெளியாகி வைரலாகியது. அதுதவிர மும்பையில் அடிக்கடி இருவரும் சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படங்களும் வெளியாகின.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய தமன்னா, தான் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக பேசுகையில், என்னுடன் நடிக்கும் நடிகரை நான் காதலிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. நான் நிறைய நடிகர்களுடன் நடித்துள்ளேன். ஒருவர் மீது கூட எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய தமன்னா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பு தளத்தில் தான் விஜய் வர்மாவை சந்தித்தேன். நான் எதிர்பார்க்கும் ஒரு நபரை போலவே இருந்தார். அவருடனான காதல் உறவு மிகவும் இயல்பாக உருவானது. நான் எதுவும் அவருக்கு செய்தது கிடையாது, ஆனாலும் என் உலகத்தை அவர் புரிந்துகொண்டு. என் மீது அக்கறை கொண்ட ஒருவர் எனக்கு கிடைத்துள்ளது, மகிழ்ச்சியாக உள்ளது என்று தமன்னா தெரிவித்தார்.