காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய நடிகை திரிஷா..!!
Feb 16, 2023, 07:05 IST

ஒரு நடிகை 20 ஆண்டுகள் ஹீரோயினாக வலம் வர முடியும் என்பதை நிரூபித்து இன்றைக்கும் பிசியாக நடித்து வருபவர் நடிகை திரிஷா
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய் நடிப்பில் மிரட்டலாக உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், படத்திலிருந்து விலகிவிட்டதாக பல தகவல்கள் கசிந்தது. ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஷ்மீர் புகைப்படங்களை பதிவிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருந்தப்போதிலும் அதெல்லாம் ரசிகர்களை சமாதானப்படுத்தி என தகவல் பரவியது.
இந்நிலையில் காஷ்மீரில் நண்பர்களுடன் காதலர் தினத்தை கொண்டாடும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை திரிஷா வெளியிட்டுள்ளார். இது ‘லியோ’ படத்தில் திரிஷா நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. காதலர் தினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.