18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை திரிஷா..!

 
1

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட ‘வால்டர் வீரைய்யா’ என்ற தெலுங்குப்படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில் ‘விஸ்வம்பரா’ என்ற புதிய படத்தில் அவர் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் திரிஷாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிரஞ்சீவி நடித்த ‘ஸ்டாலின்’ என்ற படம் வெளியானது. அதில் திரிஷா நடித்திருந்தார்.18 ஆண்டுகளுக்குப் பிறகு சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் நடிகை திரிஷா.

இந்நிலையில் தெலுங்குப் படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்திருப்பது தாய் வீடு திரும்பியதைப் போன்ற மகிழ்ச்சி அளித்துள்ளது என்று திரிஷா கூறியுள்ளார்.

From Around the web