OTTயில் வெளியாகும் நடிகை த்ரிஷாவின் படம்..!

த்ரிஷா நடிப்பில் கடந்த மாதம் வெளியான தி ரோட் திரைப்படம் கலவையான விமர்சனங்ளை பெற்றது.
படத்தில் த்ரிஷாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதைத்தொடர்ந்த தி ரோட் வெளியாக ஒரு மாதம் ஆகியிருக்கும் நிலையில் படம் வரும் 10ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழ் தவிர தெலுங்கு உள்பட பிற மொழிகளிலும் படம் ஸ்டிரீம் ஆகவுள்ளது.
இந்தப் படத்தில் சார்பாட்ட படத்தில் டான் ரோஸ் கதாபாத்திரத்தில் தோன்றிய சபீர் அகமது, சந்தோஷ் பிரதாம், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, எம்எஸ் பாஸ்கர் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை தொடர்ந்து விஜய் – த்ரிஷா இணைந்து நடித்திருக்கும் லியோ படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளன. இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எனவே த்ரிஷாவின் ரசிகர்களுக்கு இந்த மாதம் டபுள் ட்ரீட்டாக அமையவுள்ளது. தனது இளமை தோற்றம் மாறாமல் முகத்தில் அதே மினுமினுப்புடன் க்யூட் லுக்கில் இருந்து வரும் த்ரிஷா நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் பொன்னியின் செல்வன் 2, தி ரோட், லியோ என மூன்று படங்கள் வெளிவந்துள்ளன. இந்த மூன்று படங்களிலும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்த த்ரிஷா, அதற்காக மாறுபட்ட லுக்கிலும் தோன்றியுள்ளார். படத்தை அருண் வசீகரன் இயக்கியுள்ளார்.
Get ready to be on the edge of your seat this Diwali🪔 with "The Road"
— aha Tamil (@ahatamil) November 7, 2023
A suspenseful thriller that will keep you glued to your sofas!
Catch it exclusively on aha from Nov 10th @trishtrashers @Actorsanthosh @actorshabeer @actorvivekpra @Arunvaseegaran1 @SamCSmusic… pic.twitter.com/WrH6gF0a93