பழம்பெரும் நடிகை வி. வசந்தா உயிரிழப்பு- திரையுலகம் இரங்கல்..!!

நாகேஷ், சுருளி ராஜன் உள்ளிட்ட லெஜண்டு காமடி நடிகர்களுடன் நடித்து, குணச்சித்திர கதாபாத்திரங்களில் பட்டைய கிளப்பிய நடிகை வி. வசந்தா காலமானார்.
 
v vasnatha

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை வி. வசந்தா வயது மூப்பின் காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

எம்.கே.தியாகராஜா பாகவரது நாடக குழுவின் வாயிலாக சினிமாவில் அறிமுகமானவர் வி. வசந்தார். இவர் அன்பேஎ வா, இரவும் பகலும், அதே கண்கள், கார்த்திகை தீபம் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

மேலும் மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாகவும் ராணுவ வீரன் படத்தில் ரஜினிகாந்தின் அம்மாகவும் நடித்து சிறப்பான நடிப்பை வழங்கி இருப்பார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வயது மூப்பின் காரணமாக அவர் சில மாதங்களாக படுத்தபடுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 3.40 மணியளவில் சென்னையிலுள்ள அவரது வீட்டில் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. 

திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். 
 

From Around the web