பிக் பாஸ் போட்டியாளர்களுடன் நடிகை வனிதா..!

 
1

பொதுவாக பிக் பாஸ் என்றாலே நல்ல வாழ்கை கிடைக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் லட்சம் லட்சமாக பணம் கிடைக்கு என்ற காலம் போய் இன்று சண்டைகளுக்கு சர்ச்சைகளுக்கும் இருப்பிடமாக ஆகி விட்டது.

அந்த வகையில் சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் 7ம் சீசன் பைனல் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. [பாதியில் வந்து அழுதுக்கொண்டே கடைசி வரை இருந்து இறுதியில் டைட்டில் அடித்துவிட்டார் என அர்ச்சனாவுக்கு கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வலுத்து வருகின்றனர்.

டைட்டில் வென்ற அழுகை நாயகி அர்ச்சனாவுக்கு மொத்தம் 50 லட்சம் ருபாய் பணம் பரிசாக கொடுக்கப்பட்டது. அது மட்டுமின்றி அவருக்கு ஒரு காரும் பரிசளிக்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே நடிகை வனிதா விஜயகுமார் தினமும் ஷோவை விமர்சித்து வருகிறார்.

இந்த சீசனில் தனது மகள் ஜோவிகாவும் போட்டியாளராக இருந்த போதிலும் அவரையும் சேர்த்து தான் பாரபட்சமின்றி விமர்சனம் செய்தார் .இந்நிலையில் தற்போது தனது உறவினர் வீடு திருமணத்திற்கு பிக் பாஸ் போட்டியாளர்களை வனிதா அழைத்துள்ளார்.

அங்கு கல்யாண விருந்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாராம் பக்கத்தில் பதிவு செய்தும் உள்ளார்.

From Around the web